அன்வார் நீடிப்பாரா? விஜய் முதலமைச்சர் ஆவாரா? - மலேசியாவில் டிங் டிங் ஜோதிடர் பரபரப்பு தகவல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர். நவ 6: தமிழகத்தின் பிரபல டிங் டிங் ஜோதிடர் பாபு மலேசியாவுக்கு வந்துள்ள நிலையில், அவரிடம் மலர் டிவி சார்பில் இரு கேள்விகளை நமது நிருபர்  முன் வைத்தார். அதற்கான பதிலை அதிரடியாகத் தெரிவித்துள்ளார் டிங் டிங் பாபு.  மலேசியாவின் தற்போதைய பிரதமர் அன்வார் பிரதமராக  நீடிப்பாரா, அவருக்கு அடுத்த வாய்ப்புகள் உள்ளதா? என்ற கேள்விக்கு டிங் டிங் பாடிய அவர், அன்வார் நீடிக்க முடியாது என்று கூறினார். கட்சிகள் பிரியும் வாய்ப்புகள் இருக்கு எனவே அன்வாருக்கு அது பாதகம்தான். ஆனால், ஒன்றாக இருந்தால் பாதிப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார். அதே நேரம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பலமான கூட்டணி அமைத்தால் அவர்கள் வெற்றிபெறவே வாய்ப்புகள் அதிகம் என்று கூறினார்.

தமிழ் நாட்டில் நடிகர் விஜய் முதலமைச்சர் ஆவாரா?  என்ற கேள்விக்கு, வர வாய்ப்பு நிறையவே இருப்பதாகத் தெரிவித்தார். கூட்டணி சேர்ந்தால் நிச்சயம் வருவார். 56 வயசுல கண்டிப்பாக முதல்வர் ஆவார். 100 விழுக்காடு முதலமைச்சராக வருவார் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *