அம்பாங் கம்போங் பெர்மாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? பொது மக்கள் கேள்வி!
- Muthu Kumar
- 04 Oct, 2025
(இரா.கோபி)
அம்பாங், அக். 4-
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அம்பாங் கம்போங் தாசேக் பெர்மாயில் கடந்த மாதம் 22ஆம் தேதி அங்கு வசிக்கின்ற மக்கள் கொடுத்த புகாரின் தொடர்பாக இன்னும் எந்த ஒரு தீர்வும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எடுக்காததால் இங்கு வசிக்கின்ற மக்கள் வேதனையில் உள்ளதாக திருமதி கிருஷ்ணவேணி தெரிவித்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கிட்டத்தட்ட 50 குடும்பங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் 5 ஆண்டுகளாக இங்குள்ள வீடுகளுக்கு பக்கத்தில் உள்ள மேடுகளில் இருந்து குப்பைகள், மண்,கற்கள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பல தடவை சம்பந்தப்பட்ட இலாகாவிடம் புகார் கொடுத்தும் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.நாங்கள் சிலாங்கூர் மந்திரி பெசாரிடம் மகஜர் வழங்கியுள்ளோம். ஆனால் அதற்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இது மிக வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் ஊடகங்களில் வெளியான எங்கள் கம்போங் பெர்மாயின் பிரச்சினைகளை பார்த்தும் பார்க்காமல் இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை சந்திக்க வந்து விடுகிறார்கள் என்று திருமதி கிருஷ்ணவேணி வேதனையுடன் தெரிவித்தார்.
எங்கள் இடத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கடிதம் மூலம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இங்கு வசிக்கின்ற மக்களுக்கு விபரீதம் ஏற்பட்டால் தான் நடவடிக்கை எடுப்பார்களா என்று கேள்வி எழுப்பினார் கிருஷ்ணவேணி. இங்கு பல குடும்பங்கள் மழைக் காலங்களில் என்ன நடக்குமோ என்ற பயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் மழை வந்தால் யாரும் தூங்குவதில்லை.காரணம் என்ன நடக்கும். எப்போது மண் சரிவு ஏற்படும் என்ற பயம் இங்குள்ள எல்லோருக்கும் இருக்கிறது.
யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நினைத்து சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரிடம் மகஜர் வழங்கினோம். அவரும்
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் யாரை தான் பார்க்க வேண்டும் என்று மன வேதனையோடு தெரிவித்தார் திருமதி கிருஷ்ணவேணி.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



