புதிய சீசனில் ஜேடிதியின் ஆளுமை தொடருமா?
- Muthu Kumar
- 07 Aug, 2025
ஜொகூர் பாரு, ஆக. 7-
11 முறை தொடர்ச்சியாக லிகா சூப்பர் வெற்றியாளராக விளங்கும் ஜொகூர் டாருல் தக்சிம், வரும் வெள்ளிக்கிழமை சுல்தான் இப்ராகிம் மைதானத்தில் நடைபெறும் சும்பாங்க்சே கிண்ணத்தை வெல்ல ஆதிக்கம் நிறைந்த அதேவேளையில் சிலாங்கூர் குழுவுக்கு போட்டி அளிக்கக்கூடிய 11 வீரர்களைக் களமிறக்க உள்ளது.
உள்ளூர் கால்பந்து ஆய்வாளர் ஹஸ்னிசாம் உசிர் கூறுகையில், ஜேடிதி இந்த முறை வித்தியாசமான அணுகுமுறையுடன் களமிறங்கலாம். கடந்த சீசனை விட மிகவும் வலிமையான வீரர்களை அணி களமிறக்கலாம். இது கத்ஸுஹிதோ கினோஷி பயிற்சியாளராக உள்ள சிலாங்கூர் அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜேடிதி இந்த முறை தமது அணியில் எட்டு புதிய வீரர்களை சேர்த்துள்ளது. ஜான் இராசபால், நாச்சோ மெண்டஸ், ஜோவாவ் பிகியிரெடோ, ஹெக்டர் ஹெவல் ஆகிய நான்கு பூர்வீக இறக்குமதி வீரர்கள் ஜேடிதியை மேலும் வலுப்படுத்துவார்கள்.மேலும், அன்டோனியோ கிளவுடர், ஜைரோ டா சில்வா. டெட்டோ மார்ட்டின், மவுஸ்ஸா சிடிபே ஆகிய புதிய இறக்குமதி வீரர்களும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர் என்று அவர் கூறினார்.
ஜேடிதியின் தற்போதைய வீரர்கள், புதிய சேர்க்கைகள்,பயிற்சியாளர் சிஸ்கோ முனிஸுக்கு சிலாங்கூர் அணியை எதிர்கொள்ள கச்சிதமான தயாரிப்பு செய்ய வாய்ப்பளிக்கின்றன. இது 'தி ரெட் ஜயன்ட்ஸ்' என்று அழைக்கப்படும் சிலாங்கூர் அணிக்கு பெரும் சவாலாக அமையும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



