இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்புடைய வெ.16.9 கோடி பறிமுதலாகுமா?

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 8-

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புடைய பதினாறு கோடியே தொண்ணூறு லட்சம் வெள்ளியைப் பறிமுதல் செய்யும் நோக்கத்தில் மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விண்ணப்ப மனுவொன்றை நேற்று தாக்கல் செய்தது.

அந்த விண்ணப்பத்தில் இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோ முகமது அனுவார் முகமது யூனுஸ் முதல் பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். இஸ்மாயில் சப்ரி இரண்டாவது பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் இஸ்மாயில் சப்ரிக்குச் சொந்தமான அப்பணத்தை முகமது அனுவார் வைத்திருந்தார் என்று எம்ஏசிசி திடமாக நம்புவதால், எம்ஏசிசி சட்டத்தின் 41(1) ஆவது பிரிவின் கீழ் அந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முகமது அனுவாரிடமிருந்து ஏற்கெனவே கைப்பற்றப்பட்டுள்ள 14,772,150 , 6,132,350 , 1,461, 400 அமெரிக்க டாலர், முப்பது லட்சம் சுவீஸ் பிராங்க், 12,164,150யூரோ, 50,250 ஸ்டெர்லிங் பவுண்டு, 44,600 நியூசிலாந்து டாலர், 34.75 திர்ஹாம், 352,850 ஆஸ்திரேலிய டாலர் போன்றவற்றைப் பறிமுதல் செய்ய எம்ஏசிசி முயன்று வருகிறது.

இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக நடைபெற்றுவரும் லஞ்சஊழல் மற்றும் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணையின்போது பதினேழு கோடியே எழுபது லட்சம் வெள்ளி மதிப்புடைய ரொக்கப்பணமும் சொத்துகளும் கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று கைப்பற்றப்பட்டன.

SPRM memohon untuk merampas wang RM16.9 juta berkaitan bekas PM Ismail Sabri Yaakob. Turut dinamakan bekas setiausaha politik beliau, Datuk Anuar Mohd Yunus. Rampasan ini melibatkan pelbagai mata wang asing yang dirampas dalam siasatan rasuah dan pengubahan wang haram.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *