இடைநிலைக் கல்வி கட்டாயமாகிறது மக்களவையில் மசோதா தாக்கல்!
- Muthu Kumar
- 29 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 29-
இடைநிலைக் கல்வியைக் கட்டாயமாக்கக் கோரும் ''கல்வி (திருத்தம்) மசோதா 2025" முதல் வாசிப்புக்காக நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் இரண்டாவது வாசிப்பும் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கல்வி துணையமைச்சர் வோங் கா வோ குறிப்பிட்டார்.
1996ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 2ஆவது பிரிவில் (சட்டம் 550) இடம் பெற்றுள்ள “கட்டாயக் கல்வி" எனும் வார்த்தையின் வியாக்கியானத்தில் இடைநிலைக் கல்வி எனும் வார்த்தை சேர்க்கப்பட வேண்டும் என்று அந்த மசோதா வலியுறுத்துகிறது. இடைநிலைப் பள்ளியில் படிக்க பதிவுசெய்யப்படும் மலேசியப் பிள்ளைகள், இடைநிலைப் பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்க வேண்டும் என்று இந்த உத்தேச 32ஏ
சட்டவிதி பரிந்துரைக்கிறது.
இதனைக் கடைப்பிடிக்கத் தவறும் பெற்றோர்களுக்கு ஐயாயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படலாம்.
அந்த உத்தேச திருத்தங்களால் அரசாங்கத்திற்குக் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். ஆனால், அதற்கு அந்த செலவுத்தொகையின் செலவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



