அம்மாவின் இறப்புச் சான்றிதழ் தருவார்களா? - நில அமிழ்வில் மாயமான விஜயலட்சுமி மகன் வேண்டுகோள்
- Shan Siva
- 23 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 23: கடந்த வருடம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஜலான் மஸ்ஜிட் இந்தியாவில், இந்திய மாதுவான 48 வயது மாது விஜயலட்சுமி நில அமிழ்வில்
மூழ்கி மாயமானார். இன்றோடு அவர் மாயமாகி 1 வருடம் ஆன நிலையில், அவரது மகன் சூர்யா இன்று ஜலான் மஸ்ஜித் இந்தியாவில் விஜய லெட்சுமி
மாயமான இடத்தில் சிறப்பு பூஜையைச் செய்தார். அதோடு அன்னதானமும் வழங்கினார்.
தாயைப் பறிகொடுத்துவிட்டேன்... ஆனாலும் அவர் இருக்கிறாரா இல்லையா
என்ற ஏக்கத்திலேயே இருக்கிறோம். இருந்தபோதும் அம்மாவுக்கான இறப்புச் சான்றிதழ் இது
வரை நாங்கள் பெறவில்லை. மலேசிய அரசிடம் இருந்து தங்களுக்கு அம்மாவின் இறப்புச் சான்றிதழ்
வேண்டும் என்று அவர் வேண்டுகோளை முன்வைத்துள்ளார். மலேசிய அரசு விரைந்து இதற்கான நடவடிக்கையை
மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



