90,000க்கும் மேற்பட்ட சட்டவிரரோதக் குடியேறிகள் கைது! 2025 குடிநுழைவுத் துறை சாதனை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 28,

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்குக் குடியேறுபவர்களுக்கு எதிராக இவ்வாண்டு குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில் 90,000க்கும் மெற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தின் முதல் 25 டிசம்பர் வரையில் மலேசியா முழுவதும் மொத்தம் 13,678 தொடர் சோதனை நடவடிக்கைகளைக் குடிநுழைவுத் துறை மேற்கொண்டதில் 235,343 வெளிநாட்டினர்களைச் சோதனையிட்டதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு நடவடிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முறையான ஆவணங்கள் இல்லாது சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த வெளிநாட்டினர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த குடிநுழைவுத் துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனைகளின் போது 50,472 வெளிநாட்டினர்களும், எல்லை பகுதிகளில் மலேசியாவுக்குள் நுழையும் போது 41,357 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தோனேசியர்கள் என தெரிய வந்துள்ளது. 

இந்தோனேசியாவைச் சேர்ந்த 15,385 பேரும், பங்களாதேஷைச் சேர்ந்த 11,105 பேரும், மியன்மாரைச் சேர்ந்த 9,789 பேரும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 4,365 பேரும் பாக்கிஸ்தானைச் சேர்ந்த 2,497 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 1,630 பேரும், தாய்லாந்தைச் சேர்ந்த 1,493 பேரும், சீனாவைச் சேர்ந்த 1,038 பேரும் வியட்நாமைச் சேர்ந்த 909 பேரும், நேப்பாளத்தைச் சேர்ந்த 769 பேரும் என குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக வெளிநாட்டினர்கள் மலேசியாவில் தங்கியிருக்க ஆதரவளித்ததாக நம்பப்படும் 2,012 மலேசியர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய குடிநுழைவுத் துறை வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு நடவடிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *