மோசடியில் ஈடுபட்ட 16 வெளிநாட்டினர்களுடன் உள்ளூர்வாசியும் கைது!
- THINAGAREN SANGGAREN
- 06 Mar, 2026
மார்ச் 6,
ஜொகூரில் தேசிய குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 16 பெண்களையும் உள்ளூர் ஆடவரையும் கைது செய்துள்ளது. ஜொகூரின் Taman Setia Tropika குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டைச் சொகுசு கேளிக்கை மையமாக மாற்றியமைத்து மோசடியில் ஈடுப்பட்டதாக 11 வெளிநாட்டினர்களுடன் ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும் Batu Pahat, Skudai பகுதிகளில் 4 வெளிநாட்டுப் பெண்களுடன் உள்ளூர் ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் ஜொகூரில் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட வீடுகளிலிருந்து RM3,025 ரிங்கிட் ரொக்கப் பணமும் போலி அடையாள அட்டைகள், போலி பாஸ்போர்ட்கள் என முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் 16 முதல் 32 வயதுள்ள Thailand, Vietnam, Indonesia நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



