கிளாந்தானில் 12 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 4,

கிளாந்தானில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 12 வெளிநாட்டினர்களைக் கிளாந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. கிளாந்தானில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து துறையுடன் இணைந்து இச்சோதனை நடவடிக்கை மேற்கொண்டதில் 2 பெண்கள் உட்பட 12 வெளிநாட்டினர்கள் பொதுப்போக்குவரத்திலும் லாரிகளிலும் பயணிக்கும் போது கைது செய்யப்பட்டதாகக் கிளாந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டினர்கள் Bangladesh, India, Sri Lanka ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. புத்தாண்டுக்காகக் கிளாந்தான் மாநிலத்திற்கு அவர்கள் சுற்றுலா மேற்கொண்டதாகவும் சிலாங்கூர் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் சட்டவிரோதமாகத் தங்கி வேலை செய்து வருவதாகவும் கைது செய்யப்பட்ட 12 வெளிநாட்டினர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலதிக விசாரணைக்காக 12 வெளிநாட்டினர்களும் தானா மேரா குடிநுழைவு அலுவலகத்தில் தடுத்து வைத்திருப்பதாகவும் அவர்களை அழைத்து வந்த 4 வாகனமோட்டிகளையும் விசாரித்து வருவதாகக் கிளாந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *