88 வெளிநாட்டினர்கள் கைது! நிறுவன உரிமையாளர்களுக்கு நோட்டிஸ்!
- Thinagaren Sanggaren
- 31 Jan, 2026
ஜனவரி 31,
சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்திய 7 நிறுவன உரிமையாளர்களுக்குப் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. நேற்றிரவு பகாங்கில் உள்ள Maran, Temerloh, Jerantut, Pekan, Kuantan ஆகிய 5 மாவட்டங்களில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதில் 88 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுமானப் பணிகள், தோட்டத்தொழில்களில் ஈடுபடுத்தப்பட்ட 185 வெளிநாட்டினர்களிடம் சோதனை நடத்தியதில் 88 வெளிநாட்டினர்கள் முறையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான உரிமம் இல்லாததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிமம் இல்லாமல் வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்திய நிறுவனங்களை அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும் 14 நாள்களுக்குள் நிறுவன உரிமையாளர்களிடமிருந்து விளக்கம் கிடைக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டினர்களிடம் உண்மையானப் பாஸ்போர்ட்கள் இல்லாததால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்படவில்லை என பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



