கைது செய்யப்பட்ட 115 வெளிநாட்டினர்களைச் சொந்த நாட்டுக்கு அனுப்பிய குடிநுழைவுத் துறை!
- Thinagaren Sanggaren
- 23 Dec, 2025
டிசம்பர் 23,
சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்ததற்காகக் குடிநுழைவுத் துறையால் கைது செய்யப்பட்ட 115 வெளிநாட்டினர்கள் இன்று காலை அவர்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்று காலை KLIA 1 & KLIA 2 அனைத்துலக விமான நிலையம், SENAI அனைத்துலக விமான நிலையம், பாசீர் குடாங் கப்பல் துறைமுகம் வழியாக அவர்களின் சொந்த நாட்டுக்குத் திரும்பியதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட Myanmar, Indonesia, Bangladesh, Pakistan, Nepal, Thailand, China, ஆகிய நாடுகளைச் சேர்ந்த அனைத்து வெளிநாட்டினர்களும் முழுமையான விசாரணைக்குப் பின்னர் சிறை தண்டனையை எதிர்நோக்கியதாகவும் அவரவர் சொந்த நாட்டின் தூதரகத்தின் செலவில் அவர்கள் அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. 115 வெளிநாட்டினர்களும் எந்தவொரு குற்றச்சம்பவங்களில் ஈடுபடவில்லை என்பதைக் குடிநுழைவுத் துறை உறுதிப்படுத்திய பின்னரே அவர்களை அனுப்பி வைத்திருப்பதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



