கிள்ளான் & அலாம் மெகாவில் 95 வெளிநாட்டினர்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 13 Jul, 2026
ஜூலை13,
சிலாங்கூரின் கிள்ளான், அலாம் மெகா பகுதிகளில் சிலாங்கூர் மாநில குடிநுழைவு துறையினர் மேற்கொண்ட சோதனையில் 95 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை 11 மணிக்குத் தொடங்கிய சோதனையில் கிள்ளானில் 1143 வெளிநாட்டினர்களை சோதனையிட்டதாகவும் 73 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் Alam Mega'வில் 111 வெளிநாட்டினர்களை சோதனையிட்டதாகவும் 22 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிலாங்கூர் மாநில குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டினர்களும் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை சட்ட விரோதமாக பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிலாங்கூர் மாநில குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



