வணிகத்தில் ஈடுபட்ட 9 வெளிநாட்டினர் கைது!
- Sangeetha K Loganathan
- 02 Jul, 2025
ஜூலை 2,
சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த வெளிநாட்டினர்கள் மீது குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 9 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 9 வெளிநாட்டினர்களும் பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகச் சபா மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கோத்தா கினாபாலுவின் 4 வெவ்வேறு இடங்களில் 27 வெளிநாட்டினர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வெளிநாட்டினர்களில் 9 பாக்கிஸ்தானியர்கள் உள்ளூர் கடைகளை நடத்தி வந்ததாகவும் முறையான ஆவணங்களின்றி மலேசியாவுக்குள் நுழைந்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணயில் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து மலேசியாவுக்கு வருபவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவும் தொழிலாளர்களாகவும் மட்டுமே இருக்க முடியும் என்றும் வணிகத்தில் ஈடுபட எந்தவோர் உரிமையும் இல்லை என சபா மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Imigresen Sabah menahan 9 warga Pakistan yang disyaki menjalankan perniagaan tanpa dokumen sah di Kota Kinabalu. Serbuan ke atas 27 warga asing di empat lokasi mendapati mereka menyalahguna pas lawatan. Imigresen menegaskan pelawat asing hanya boleh melancong atau bekerja sah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



