கட்டுமானப் பணிகளில் சட்டவிரோத வெளிநாட்டினர்கள்! குடிநுழைவுத் துறை சோதனை!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 23,

கட்டுமானப் பணிகளுக்காகச் சட்டவிரோத வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்திய ஒரு நிறுவனத்தைச் சோதனையிட்டதில் 25 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திரங்கானுவின் கோலா நெரூஸ், செத்தியூ மாவட்டங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்தியிருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து புகார் பெற்றதை அடுத்து இச்சோதனையை மேற்கொண்டதாகத் திரங்கானு மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. திரங்கானுவின் கோலா நெரூஸ், செத்தியூ மாவட்டங்களில் உள்ள 8 வளாகங்களில் சோதனையை மேற்கொண்டதில் 40 வெளிநாட்டினர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் 25 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் திரங்கானு மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளாக மலேசியாவுக்கு வந்த இந்தோனேசியா வங்காளதேசம், கம்போடியா நாடுகளைச் சேர்ந்த 10 பேருடன் எந்தவோர் ஆவணங்களும் இல்லாத 15 வெளிநாட்டினர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக திரங்கானு மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் பகுதிகளில் தற்காலிக பலகை வீடுகளை அமைத்து அவர்கள் தங்கியிருப்பதாகவும் அவர்களிடம் எந்தவோர் ஆவணங்களும் இல்லாததால் சம்மந்தபட்ட குத்தகை நிறுவனத்தின் உரிமையாளரை விசாரணைக்கு அழைத்திருப்பதாகத் திரங்கானு மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *