ஆவணங்களில்லாத 28 வெளிநாட்டினர்கள் கைது! – பகாங் குடிநுழைவுத் துறை!
- Thinagaren Sanggaren
- 05 Aug, 2025
ஆகஸ்ட் 5,
பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறையும் எல்லை பாதுகாப்பு கடல்சார் ஆணையமும் இணைந்து மேற்கொண்ட சோதனையில் 28 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலை 8 மணிக்கு முதல் இரவு 11 மணிவரையில் 25 அதிகாரிகள் கொண்ட குழு இச்சோதனையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாந்தான் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கடல்கரை புறங்களிலும் நகரப்புறங்களிலும் உள்ள 179 வெளிநாட்டினர்களைச் சோதனையிட்டதாகவும் அதில் போலி ஆவணங்களுடன் பணிக்கு அமர்த்தப்பட்ட 28 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 28 வெளிநாட்டினர்களும் முறையான ஆவணங்களில்லாமல் வணிகத்தில் ஈடுபட்டதாகவும் சட்டவிரோதமாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும் போலி ஆவணங்களுடன் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில்தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 28 வெளிநாட்டினர்களும் மேலதிக விசாரணைக்காக 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களைப் பணிக்கு அமர்த்திய உள்ளூர் வணிகர்களையும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



