ஆசியானில் தீமோர்-லெஸ்தேயின் இணைப்பு: உலகளாவிய வெளிப்பாட்டை வலுப்படுத்தும்!

top-news
FREE WEBSITE AD

டிலி, செப். 21-

ஆசியானில் தீமோர்-லெஸ்தேயின் இணைப்பு, அந்த அமைப்பை மேலும் விரிவுபடுத்தி அதன் உலகளாவிய வெளிப்பாட்டை வலுப்படுத்தும்.அந்த அமைப்பில் உறுப்பியம் பெற்றிருப்பது. புதிய பங்காளிகள், தொலைநோக்குடன் வட்டாரத்தை இணைக்கும் ஒரு வாய்ப்பாகும் என்று தீமோர்-லெஸ்தேயின் ஆசியான் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மிலேனா ரஞ்சல் கூறினார்.

"ஆசியானில் இணைவது, நம் நாட்டிற்கு ஒரு புதிய அத்தியாயம் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு சாதனை, மிகப்பெரிய சாதனை. இது ஒரு மைல்கல். இது
ஒரு சிறந்த பயணமாகும். எனவே, எங்களைப் பொறுத்தவரை ஆசியானில் சேருவதை, திமோர்-லெஸ்தே இவ்வட்டாரத்தில் இணைவதற்கான ஒரு திறந்த வழி என்று நாங்கள் கருதுகிறோம். அந்த வட்டாரத்தில்
பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்வையாளர் அந்தஸ்தை நாங்கள் அனுபவித்தோம். அது ஒரு துடிப்பான சமூகம், மிகவும் துடிப்பானது", என்றார் அவர்.

அண்மையில் டிலியில் உள்ள தனது அலுவலகத்தில் பெர்னாமாவுக்கு அளித்த நேர்காணலின்போது மோதலுக்குப் பிந்தைய மாநிலங்களின் ப7+ அமைப்பிற்கு தீமோர் லெஸ்தே ஒரு பாலமாக செயல்பட முடியும் என்று ரஞ்சல் கூறினார்.2002ஆம் ஆண்டு தீமோர்-லெஸ்தே சுதந்திரம் பெற்றதிலிருந்து மலேசியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை அவர் பாராட்டினார்.

ஆசியானில் இணைவதன் வழியாக நிறுவனச் சீர்திருத்தம், மனித மூலதனத்தில் முதலீடு, கொள்கைகளை வலுப்படுத்தும் மாற்றம் ஏற்படும் என்றும் ரஞ்சல் விவரித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *