இந்தியர்களும் சீனர்களும் PAKATAN மீது அதிருப்தி! பக்கத்தான் தோல்விக்கு இதுதான் காரணமா?
- THINAGAREN SANGGAREN
- 13 Jul, 2026
ஜூலை 13,
ஜோகூர் மாநில சட்ட மன்றத் தேர்தலில் பக்கத்தான் அடைந்த தோல்விக்கு பக்கத்தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தான் என டி.ஏ.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Charles Santiago தெரிவித்தார். RAFIZI தலைமையிலான BERSAMA கட்சி தேர்தலுக்கு 50 நாள்கள் முன்னாடி தொடங்கியது. குறிப்பாக PKR கட்சியிலிருந்து கணிசமானவர்கள் BERSAMA கட்சியில் இணைந்தாலும் அது தேர்தலைப் பாதிக்கவில்லை என Charles Santiago தெரிவித்தார்.
பக்கத்தானின் வெற்றியை இந்தியர்களும் சீனர்களும் உறுதிப்படுத்தி வந்தனர். Johor தேர்தலில் இந்தியர்களும் சீனர்களும் PAKATAN மீது அதிருப்தியில் இருந்ததால் வாக்குகள் சிதறியதாக Charles Santiago தெரிவித்தார். அதே சமயத்தில் SPRM முன்னாள் தலைமை ஆணையர் TAN SRI AZAM BAKI மீதான வெளிநாட்டு வர்த்தக ஊழல், இளைஞர்களுக்காக வேலை வாய்ப்புகள், பட்டதாரிகளுக்கான அரசு வேலைகள், சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனங்கள் என பல்வேறு துறைகளில் மக்களின் எதிர்பார்ப்பை பக்கத்தான் அரசு நிறைவேற்றவில்லை என்பதை உணர்ந்துள்ளனர் என Charles Santiago தெரிவித்தார். மந்தமான தேர்தல் அணுகுமுறையால் பக்கத்தான் ஜோகூர் தேர்தலில் தோல்வி அடைந்ததாக Charles Santiago தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



