இந்தியர்களும் சீனர்களும் பாஸ் கட்சியை நம்புகிறார்கள்! – DHPP பாஸ் Balasubramaniam!
- Thinagaren Sanggaren
- 04 Sep, 2025
செப்டம்பர் 4,
பாஸ் கட்சிக்குப் போதுமான இந்தியர்களின் ஆதரவும் சீனர்களின் ஆதரவும் இருப்பதாகப் பாஸ் கட்சியின் இஸ்லாம் அல்லாதோர் ஆதரவாளர் கூட்டணியின் தலைவர் Balasubramaniam Nachiappan தெரிவித்தார். குவாந்தான் ம.சீ.சாவின் தீ லியான் கேர் பாஸ் கட்சிக்குச் சீனர்களின் ஆதரவைப் பெற அறிவுரை வழங்கியிருப்பதற்கு எதிராக Balasubramaniam Nachiappan இவ்வாறு கூறினார். பாஸ் கட்சி இஸ்லாம் அல்லாதவர்களின் ஆதரவைப் பெறுவதில் முதிர்ச்சி அடைந்து வருவதாகவும் சீன இந்திய சமூகத்தைப் பாஸ் கட்சி கைவிடாது எனும் நம்பிக்கையையும் தாம் கொண்டிருப்பதாக Balasubramaniam Nachiappan தெரிவித்தார்.
பாஸ் கட்சியின்
மீது வைக்கப்படும் இன மத அவதூறுகளிலிருந்து பாஸ் கட்சி விலகியிருப்பதாகவும் அனைத்து
சமூகத்திற்குமான மலேசியாவைக் கட்டமைக்க பாஸ் கட்சி செயலாற்றி வருவதாகவும் Balasubramaniam Nachiappan தெரிவித்தார். பாஸ் கட்சியின் வெளிப்படையான அரசியல் நேர்மையான அரசியல் இந்தியர்களையும்
சீனர்களையும் ஈர்ப்பதாகவும் அவர்களைத் தக்க வைத்துக்கொள்ள பாஸ் கட்சியின் இஸ்லாம் அல்லாதோர்
ஆதரவாளர் கூட்டணியான DHPP முக்கிய செயல்திட்டங்களை வகுத்து வருவதாகவும் அதன் தலைவரும் முன்னாள் செனட்டருமான
Balasubramaniam
Nachiappan தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



