புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2026!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 9,

இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து தமிழ்க்கல்வியை நிலைநாட்டிய தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு முன் முயற்சியாக எதிர்வரும் 2026 ஜூலை 5 முதல் ஜூலை 5 வரை புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2026 சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெறவிருக்கிறது. உலகில் பல நாடுகளில் படர்ந்திருக்கும் தமிழ்க் கல்வியாளர்களை ஒன்றிணைத்து தொடர்ந்து தமிழ்க்கல்விக்கான மேம்பாடுகளை முன்னிலைப்படுத்தி மலேசியா, சிங்கப்பூர் என மேலும் பல நாடுகளிலுள்ள தமிழ்க் கல்வியாளர்களை ஒன்றிணைக்க இம்மாநாடு முக்கிய பங்கை வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1998 நிறுவப்பட்ட உலகத் தமிழ்க் கல்விக் கழகம் இம்மாநாட்டை நான்காம் முறையாக ஏற்று நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவுத் திறனையும் ஒருங்கிணைப்பதனால் மொழி கற்பித்தலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாக தமிழ்க் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆராய்வதை உறுதிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மலேசியாவிலிருந்து 30 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழு இம்மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாகவும் 3 நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள், பயிற்சிப் பட்டறைகள், குழு விவாதம், மாணவர் ஆய்வுக் கட்டுரைகள் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க விருபுவர்கள் itadtec.org அகப்பக்கத்தில் பதிவு செய்யலாம் என்றும் மாநாடுகளில் பங்கேற்று பயன்பெறும்படியும் மலேசியாவின் 200 ஆண்டுகள் கடந்த தமிழ்க்கல்விக்கான மகுடமாகவும் இந்த புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2026 திகழும் என நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *