இந்திரா காந்தியின் கணவரைத் தேடும்பணி துரிதப்படுத்த உள்துறை அமைச்சு வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 11,

இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான  ரிதுவான் அப்துல்லாவைத் தேடும் பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். ரிதுவான் அப்துல்லா தொடர்பானத் தகவல்களைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் இதுவரையில் ரிதுவான் அப்துல்லாவைத் தேடும் பணிகளில் காவல் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து காவல்துறை விசாரணை அறிக்கை வெளியிடும் என சைஃபுதீன் நசுத்தியோன் உறுதியளித்தார். கடந்த அக்தோபர் 28 ரிதுவான் அப்துல்லா மானிய விலையிலான எரிபொருளைப் பயன்படுத்தியதாகச் செய்திகள் வெளியானது.

கடந்த 2018 இந்திரா காந்தியின் கணவரான ரிதுவான் அப்துல்லா தனது 2 பிள்ளைகளையும் இஸ்லாத்திற்கு மாற்றியது ஒருதலைபட்சமானது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ரிதுவான் அப்துல்லா தலைமறைவானார். இதுநாள் வரை நீதிமன்றம் பல முறை ரிதுவான் அப்துல்லாவைக் கைது செய்ய வலியுறுத்தியும் ரிதுவான் அப்துல்லா தலைமறைவாகவே இருப்பதாகவும் காவல்துறை ரிதுவான் அப்துல்லாவைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் காவல்துறையின் தேடுதல் நடவடிக்கைகள் குறித்தான அறிக்கையைக் காவல்துறை வெளியிடும் என உறுதியளித்துள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *