பெற்றோருக்கு அபராதமா? அப்படியெல்லாம் இல்லை! - தகவல் தொடர்பு துணை அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 25: வயது அடிப்படையிலான தடை அடுத்த ஆண்டு அமலுக்கு வந்த பிறகும், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினால், அவர்களது பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று தகவல் தொடர்புதுறை துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு, இது குறித்து அமைச்சர்கள் அல்லது அமைச்சரவை மட்டத்தில் எந்த முடிவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

ஆனால் இது போன்ற பிரச்சினைகளுக்கு, விவாதங்களும் ஒருமித்த கருத்தும் மிக முக்கியம். இந்தத் தடையை தள வழங்குநர்களுடன் விவாதிக்கும்போது தாங்கள் உறுதியாக இருப்போம் என்று அவர் தெரிவித்தார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணைய பயன்பாட்டைக் கண்காணித்து, ஆன்லைனில் செல்லும்போது பாதுகாப்பான பழக்கவழக்கங்கள் குறித்து அவர்களுக்குக் கற்பிக்கும் பொறுப்பு இன்னும் உள்ளது என்று தியோ கூறினார்.

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய அமைச்சரவை அடுத்த ஆண்டு முதல் முடிவு செய்துள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தகது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *