உரிமமின்றி சாலையோரம் கடைகள் நடத்திய வியாபாரிகளுக்கு அபராதம்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

சிப்பாங், அக்.28-

அனைத்துலக மோட்டோஜிபி வழித் தட வளாகத்தில் சாலை ஓரங்களில் தற்காலிகக் கடைகள் அமைத்து வியாபார உரிமமின்றி செயல்பட்ட 10 பேருக்கு சிப்பாங் நகராண்மைக்கழகத்தின் விற்பனைப்பகுதி அமலாக்கப் பிரிவினர் அபராதக் கடிதங்களை வழங்கி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

வியாபாரம் செய்வதற்கான அனுமதியும் உரிமமும் இல்லாத காரணத்தால் 2007 ஆம்
ஆண்டின் நகராண்மைக்கழகச் சட்டம் பிரிவு 3 இன் கீழ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துச் செல்லப் பட்டதாக அதன் உயர் அதிகாரி இப்ராஹிம் ரட்பி தெரிவித்தார்.

சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் கண்காணிப்பில் இருக்கும் இப்பகுதியில் விற்பனை செய்வதற்கான அனுமதியும் அதே வேளையில் அதற்கான உரிமமும் கொண்டிராத காரணத்தால் உள்ளூர்வாசிகளான 10 பேரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, குற்றம் நிரூபணமானால் அபராதம்,தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் விற்பனைப் பிரிவு, வியாபாரம் செய்ய நோக்கமுடைய மனிதர்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் விதிமுறைகளைக் கடைப்பிடித்து சுய தொழில் செய்து வாழ்வாதாரம் தேட விருப்பம் கொண்ட உள்ளூர் குடியிருப்பாளர்கள் விற்பனைப் பகுதி அதிகாரிகளிடம் முறையான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து உரிமம் பெறும்படி இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *