2,724 MRSM மாணவர்களுக்கு INFLUENZA தொற்று!

top-news
FREE WEBSITE AD


அக்தோபர் 12,

Influenza தொற்று அதிகமாகப் பரவி வருவதால் கல்லூரிகள் இயங்கலை வகுப்பை நடத்த வேண்டும் என மாரா தொழில்கல்வி இயக்குநர்  Datuk Asyraf Wajdi Dusuki வலியுறுத்தினார். இதுவரை 34 MRSM தொழில்கல்லூரிகள் இயங்கலை வகுப்பை நடத்த முடிவெடுத்திருப்பதாகவும்  Datuk Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள MRSM கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் 2,724 மாணவர்கள் INFLUENZA தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக Datuk Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். 

இந்த இயங்கலை வகுப்பு முறை கோவிட் காலத்தில் பழகிவிட்ட காரணத்தால் தற்போது இதை MRSM தொழில்கல்லூரிகளில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இல்லை என்றும் Datuk Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். மாணவர்கள் தங்கும் விடுதியில் இருந்தபடியே வகுப்புகளை மேற்கொள்ள மாணவர் தங்கும் விடுதிகளின் வார்டன்கள் உறுதி செய்வார்கள் என Datuk Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். INFLUENZA தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள8 விரைந்து அடையாளம் காணும்படி MRSM வார்டன்களுக்கு மாரா தொழில்கல்வி இயக்குநர்  Datuk Asyraf Wajdi Dusuki வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *