மானிய விலை பெட்ரோல் நிரப்பிய சிங்கப்பூர் பிரஜைக்கு RM 9,000 அபராதம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜான் 14: தனது வாகன எண் தகட்டை மறைத்துக்கொண்டு மானிய விலையில் RON95 பெட்ரோலை காரில் நிரப்பிய சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளருக்கு கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM9,000 அபராதம் விதித்துள்ளது.

மாஜிஸ்திரேட் ஆர் சாலினி முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, தனது காருக்குச் சொந்தமில்லாத வாகனப் பதிவுத் தகட்டைக் காட்டியதற்காக 64 வயதான லாங் சா கோவ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர் ஒன்பது மாத சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஜனவரி 2 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் கூலாயில் உள்ள ஜாலான் ஜலான் ஜொகூர் பாரு - ஆயர்ஹீத்தாம், பத்து 21 1/4 இல் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக லாங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 108(3)(e) இன் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM20,000 அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *