வேப் பொருட்களை கடத்த முயன்ற மலேசிய நபரை கைது செய்த சிங்கப்பூர் அதிகாரிகள்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா:

ஒரு லாரியைப் பயன்படுத்தி 18,400க்கும் மேற்பட்ட வேப் பொருட்களையும், 1,400 வேப் தொடர்புடைய பாகங்களையும் கடத்த முயன்றதாகக் கூறப்படும் மலேசிய நபர் ஒருவரை சிங்கப்பூர் அதிகாரிகள் துவாஸ் செகண்ட் லிங்கில் கைது செய்தனர்.

செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த சாதனங்களை சிங்கப்பூர் தடை செய்ததிலிருந்து நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக நடந்த மிகப்பெரிய வேப் கடத்தல் இது என்று சிங்கப்பூரின் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாகனத்தின் ஆபத்து மதிப்பீட்டை அதிகாரிகள் நடத்திய பிறகு, சோதனைச் சாவடிக்கு லாரி வந்தபோது முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பின்னர் அதிகாரிகள் லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேப் பொருட்களைக் கண்டுபிடித்தனர். கைப்பற்றப்பட்ட பொருள் உட்பட விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *