சிங்கப்பூர் பிரதமர் இன்று மலேசியா வருகை!
- Shan Siva
- 20 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 22: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று மலேசியாவிற்கு சிறப்பு வருகை மேற்கொள்ளவுள்ளார்.இதன் போது அவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்க உள்ளார்.
இரு பிரதமர்களும் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் மலேசியாவின் அண்டை நாடாகவும், ஆசியானில் முக்கிய பங்காளியாகவும் உள்ளது, பல்வேறு துறைகளில் நெருக்கமான மற்றும் விரிவான உறவுகளைக் கொண்டுள்ளது.
சிங்கப்பூர் மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாகும். மொத்த வர்த்தகம் 2025 இல் RM402.35 பில்லியனை (US$93.97 பில்லியன்) எட்டியுள்ளது,. இது 2024 உடன் ஒப்பிடும்போது 1.5 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



