மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு ‘வேப்’ பிரியர்களுக்கு சிங்கப்பூர் வைத்த ஆப்பு!

top-news
FREE WEBSITE AD

சிங்கப்பூர், ஆக 27: வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் கடுமையான புதிய நடவடிக்கைகளின் கீழ், சிங்கப்பூரில் வேப்பிங் பயன்படுத்துகிறவர்கள் பிடிபட்டால் மலேசியர்களும் பிற வெளிநாட்டினரும் நாடுகடத்தப்படுவார்கள் மற்றும் நிரந்தர நுழைவுத் தடைகளை எதிர்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-சிகரெட்டுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டினரின் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும், மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளன.

மீண்டும் இத்தகைய குற்றம் செய்யும் குறுகிய கால மற்றும் நீண்டகால பாஸ் வைத்திருப்பவர்கள் - மூன்றாவது குற்றத்தின் போது அவர்களின் பாஸ்கள் ரத்து செய்யப்படும் என்பதோடு, அவர்கள்  நாடு கடத்தப்படுவார்கள், மேலும் எதிர்காலத்தில் நுழைவதற்குத் தடை விதிக்கப்படும்.

இந்த சாதனங்களை வைத்திருந்தாலோ அல்லது சோதனையில் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டாலோ, வெளிநாட்டினர் நாடுகடத்தப்படுவார்கள் மற்றும் நிரந்தரத் தடையை எதிர்கொள்ள நேரிடும்.

சாங்கி விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்காக வேப் அகற்றும் தொட்டிகள் நிறுவப்படும் என்றும், பயணிகள் தங்கள் சாதனங்களை ஒப்படைக்க வலியுறுத்தும் புதிய ஆலோசனைகள் இருக்கும் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கூறினார்.

18 வயதுக்குட்பட்ட முதல் முறை குற்றவாளிகளுக்கு மலேசிய ரிங்கிட்டிற்கு  RM1,750 அபராதம் விதிக்கப்படும், அதே நேரத்தில் பெரியவர்களுக்கு RM2,450 அபராதம் விதிக்கப்படும்.

இளம் குற்றவாளிகள் அல்லது முதல் முறை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படலாம், ஆனால் மீண்டும் மீண்டும் அதைப் பயன்படுத்தும் குற்றவாளிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் கே. சண்முகம் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *