ஆசியாவின் சிறந்த நாணயமாக ரிங்கிட்; இதுதான் காரணம்! – அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 18: சீரான நிதி பராமரிப்பு மற்றும் மலேசியாவின் பொருளாதாரத்தை திறம்பட நிர்வகிப்பது போன்ற நடைமுறைகள் ரிங்கிட்டை ஆசியாவில் சிறப்பாகச் செயல்படும் நாணயமாக மாற்றியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

அமைச்சர்களின் கேள்வி நேரத்தின் போது பேசிய அன்வார், நாணயத்தின் வலிமை நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பரந்த நிதி சீர்திருத்தங்கள் மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றார். இது அரசாங்க வளங்கள் திறமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது என்று தெரிவித்தார்.

RON95 பெட்ரோல் விலைகளில் சரிசெய்தல் உட்பட மொத்த மானியங்களின் குறைப்பு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

முதலில், அரசாங்க வளங்கள் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு பயனளிப்பதை உறுதி செய்வதற்காக மானியங்களை அறிமுகப்படுத்தினோம். குறைந்த வருமானக் குழுக்களுக்கு நேரடியாக உதவாத மானியங்களை நிறுத்தினோம் என்று சுட்டிக்காட்டினார்.

அதனால்தான் RON95 பெட்ரோல் உள்ளிட்டவற்றுக்கான மாற்றங்கள் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சிலர் முழுமையாக திருப்தி அடையவில்லை என்றாலும், பொதுமக்கள் பொதுவாக இந்த மாற்றங்களை வரவேற்றுள்ளனர்.

உதாரணமாக, சபாவிற்கு தாம் அண்மையில் சென்றபோது, ​​பெட்ரோல் விலைக் குறைப்பில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதைப் பார்க்க முடிந்ததாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *