படாவி உடலுக்கு பிரதமர் உட்பட அமைச்சர்கள் இறுதி அஞ்சலி!

- Shan Siva
- 15 Apr, 2025
பல
அமைச்சர்களுடன் மதியம் 1 மணியளவில் தேசிய
மசூதியின் பிரதான பிரார்த்தனை மண்டபத்திற்கு அன்வார் வந்தார்.
பிரதமருடன் விவசாயம்
மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு; உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல்
காதிர்; முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டெங்கு
டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ், இலக்கவியல் அமைச்சர்
கோபிந்த் சிங் தியோ மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட்
நயிம் மொக்தார் ஆகியோர் உடன் வந்தனர்.
பின்னர் அன்வார்
துன் அப்துல்லாவின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து சில நிமிடங்கள் செலவிட்டார்.
துன்
அப்துல்லாவின் மனைவி துன் ஜீன் அப்துல்லா, அவரது மகள் நோரி அப்துல்லா மற்றும் அவரது கணவர் கைரி ஜமாலுதீன் ஆகியோரிடம் ஆறுதல்
கூறினார்.
துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்!
Perdana Menteri Anwar Ibrahim memberi penghormatan terakhir kepada Tun Abdullah Ahmad Badawi di Masjid Negara bersama beberapa menteri dan timbalan perdana menteri. Anwar turut menyampaikan ucapan takziah kepada keluarga Allahyarham, termasuk isteri dan anak mendiang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *