நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த அமைச்சுக்கு கூடுதல் ஒதுக்கீடு தேவை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 14-

நீண்ட காலமாக பராமரிக்கப்படாத கூட்டரசு சாலைகள் உட்பட நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் பொதுப்பணி அமைச்சிற்கு அதிகமான ஒதுக்கீடுகள் தேவைப்படுகின்றன.
வரும் அக்டோபரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 வரவு செலவுத் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் அதுவாகும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

கோலாலம்பூரில் பொதுப்பணி வளாகத்தில் நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்ட கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அலெக்சாண்டர் அதனைக் கூறினார்.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள், மற்ற சாலைகளை மேம்படுத்துவதற்கான அமைச்சின் திட்டங்கள் மிகவும் மோசமான, திருப்தியற்ற நிலையில் இருக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை, கிரிக்-ஜெலி சாலை ஆகியவற்றை சீரமைப்பது குறித்த அமைச்சின் திட்டங்கள் குறித்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *