உச்சநிலை மாநாட்டு தயார்நிலை பணிகளில் வெளியுறவு அமைச்சு திருப்தி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 24-

47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, அதன் தொடர்புடைய கூட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து தரப்பினரும் மேற்கொண்டுள்ள தயாரிப்பு பணிகளில் திருப்தி அடைவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட தயார்நிலை பணிகளைப் பார்வையிட்ட போது வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் அதனைத் தெரிவித்தார். இதுவரை 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை நடத்துவதற்கான இடத் தயாரிப்பு பணிகளில் நான் மிகவும் திருப்தியடைந்துள்ளேன்.

நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த வசதிகள் மூலம் இந்த மாநாட்டிற்கான செயல்பாடுகள் சீராக நடைபெறும் என்று நம்புகிறேன். அதாவது முந்தைய 46ஆவது உச்சநிலை மாநாட்டை சிறப்பாக நிர்வகித்தது போல அமையும்,” என்று டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.அமைச்சுசார் கூட்டங்கள், வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் மாநாட்டிற்கு முன்னதாக நடைபெறும் வேளையில், ஆசியான் தலைவர்களை உள்ளடக்கிய மாநாடு அக்டோபர் 26 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் என்று டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *