வி.டி.ஏ: ஜே.பி.ஜே மூலம் உதவி வழங்க போக்குவரத்து அமைச்சு தயார்!
- Muthu Kumar
- 26 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 26-
தனிப்பட்ட நோக்கம் அல்லது பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாகன வகை ஒப்புதல், வி.டி.ஏ செயல்முறை தொடர்பான தகவல், தொழில்நுட்ப உதவியை சாலைப் போக்குவரத்துத் துறை, ஜே.பி.ஜே மூலம் போக்குவரத்து அமைச்சு வழங்கத் தயாராக உள்ளது.
விவசாய விளைச்சலை கொண்டு செல்வதற்காக அல்லது இதர பயன்பாடுகளுக்காக மூன்று சக்கர வாகனங்களைப் பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் உட்பட சிறு தோட்ட உரிமையாளர்களும் இதில் அடங்குவதாக அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 661, 1959-ஆண்டு மோட்டார் வாகனங்களுக்கான உருவாக்கம், பயன்பாட்டு விதிகள் பல நிபந்தனைகளை கொண்டுள்ளது.இந்நிலையில், மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் பொருள்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டால், அதில்
பரிந்துரைக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பூர்த்தி செய்யும் சிறப்புப் பெட்டி ஒன்று பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அந்தோணி லோக் கூறினார்.
"இந்த வகை மோட்டார் சைக்கிள்கள் சாலையில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன, சரக்கு வாகனமாக மட்டுமே பதிவு செய்ய முடியும். மேலும், இவ்வாகனம் மோட்டார் வாகன ஆய்வு மையம், பி.பி.கே.எம்-இல் ஒவ்வோர் ஆறு மாதத்திற்கும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப தகுதிகளுடன் இணங்குவதை உறுதி உறுதி செய்வதற்காக அது அவசியம்," என்றார் அவர்.இது தொடர்பில், மக்களவையில் சபாக் பெர்ணம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாம் சலான் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



