அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை-செம ஷாக்கில் பாஜக!
- Muthu Kumar
- 12 Sep, 2025
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியில் உள்ளன. அதன் வெளிப்பாடாக செங்கோட்டையன் மீண்டும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கூறி இருந்ததால் இபிஎஸ் அவரை மொத்தமாக கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டார். இதனால் தொடர்ந்து அதிமுகவில் மோதல் அதிகரித்து வருகிறது.
இதனிடையே அதிமுகவைத் தொடர்ந்து தற்போது பாஜகவிலும் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதாவது பாஜக மற்றும் அதன் கூட்டணியை நயினார் நாகேந்திரனை விட அண்ணாமலை தான் சிறப்பாக வழி நடத்தினார் என்ற பேச்சுகள் எழுந்ததால் இருவருக்கும் இடையே பணிப்போர் நிலவுவதாக பேசப்படுகிறது.
இந்நிலையில் திமுகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இல்லை என்று அண்ணாமலை பேசியுள்ளது பாஜக தலைமையை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாள்தோறும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, ஊழல் என திமுகவுக்கு எதிராக பாஜக மற்றும் அதிமுக பரப்புரை செய்து வருகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக அண்ணாமலை பேசியது புரியாமல் அவரது ஆதரவாளர்களே குழம்பி உள்ளனர். அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து தலைமை விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



