16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடக கணக்குகள் திறக்க அனுமதி இல்லை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 5: 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் தங்களது பெயரில் சமூக ஊடகக் கணக்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.

இருப்பினும், பெற்றோர் தங்களது குழந்தைகளின் சார்பில் கணக்குகளைத் திறந்து நிர்வகிப்பது அனுமதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

சிறார்களை ஆன்லைன் அபாயங்களில் இருந்து, குறிப்பாக சமூக ஊடக தளங்கள் வழியாக தொடர்பு கொள்ள முயலும் சைபர் வேட்டையாளர்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முக்கியமான கேள்வி – கணக்கை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதே. குழந்தைகள் தாங்களே கணக்குகளை நிர்வகிக்கக் கூடாது என்பதே அரசின்  நிலைப்பாடு என்று அவர் தெரிவித்தார்.

பெற்றோர் கணக்கைத் திறந்தால், அந்நியர்கள் தொடர்பு கொள்ள முயன்றால் அவர்கள் அதைப் பற்றி அறிந்துகொள்ள முடியும் என்று அவர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

புதிய கணக்குகளைத் திறக்க குறைந்தபட்ச வயது வரம்பை 16 ஆக நிர்ணயிக்கும் முயற்சியில், அரசு தற்போது சமூக ஊடக நிறுவனங்களுடன் “regulatory sandbox” முறையில் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவின் அணுகுமுறை Australia பயன்படுத்தும் “Age Assurance” முறைமையிலிருந்து வேறுபட்டதாகும் என்றும், அடையாளம் மற்றும் வயது சரிபார்ப்புக்காக MyKad தொடர்பான சட்டங்களை கூடுதல் பாதுகாப்பு அம்சமாக பயன்படுத்தும் என்றும் அவர் விளக்கினார்.

குழந்தைகள் YouTube போன்ற தளங்களில் உள்ளடக்கங்களை பார்க்கலாம். ஆனால் தனிப்பட்ட கணக்குகளைத் திறக்க முடியாது. தனிப்பட்ட கணக்குகள் இருந்தால் அந்நியர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என்று கூறினார்.

மேலும், பெற்றோர் தங்களது குழந்தைகளின் டிஜிட்டல் செயல்பாடுகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும், நீண்ட நேரம் கண்காணிப்பின்றி சாதனங்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு 16 வயது குறைந்தபட்ச வரம்பு விதிக்கும் நடைமுறை, ஜூலை மாதத்திலேயே அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *