பள்ளி விடுதிகளில் CCTV

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 8: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 200 உறைவிடப் பள்ளி விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ கல்வி அமைச்சகம் RM3 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அதன் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.

தலைமை அரசாங்க பாதுகாப்பு அதிகாரியின் அலுவலகத்தின் ஆலோசனையின் அடிப்படையில், அமைச்சகத்தின் பகடிவதை எதிர்ப்பு முயற்சிகளின் ஒரு பகுதி இது என்று அவர் கூறினார்.

மேலும் திடீர் வருகைகள் மற்றும் இட சோதனைகளையும் நடத்துகிறோம் என்று அவர் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

தடுப்பு வழிமுறைகள், கண்காணிப்பு, ஆரம்பகால தலையீடு மற்றும் பகடிவதை துன்புறுத்தல் மற்றும் அலட்சிய நிர்வாகிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை உள்ளிட்ட முயற்சிகள் குறித்து டாக்டர் ஹலிமா அலி (பிஎன்-கபார்) கேட்டதற்கு வோங் இவ்வாறு பதிலளித்தார்.

விடுதிகள் முறையான நடைமுறைகளுடன் இணங்குவதை சரிபார்க்க இரவில் இந்த இட சோதனைகள் நடத்தப்படும் என்று வோங் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *