பள்ளிகளில் CCTV - கல்வி அமைச்சு அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், செப் 12: பள்ளிகளில் பகடிவதையைத் தடுக்கவும், குற்றவாளிகளை விரைவாக அடையாளம் காணவும், அனைத்து மலேசியப் பள்ளிகளிலும் CCTV கேமராக்களை  நிறுவவிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பகடிவதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கல்வித் துறை பங்குதாரர்களுடன் சமீபத்தில் நடந்த சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் இப்பிரச்சினையைத் தடுக்க தண்டனை நடவடிக்கைகளை மட்டும் நம்பியிருப்பது போதாது என்பதை தனது அமைச்சும், பங்குதாரர்களும் ஒப்புக்கொள்கிறார்கள் என்று ஃபத்லினா கூறினார். முதன்மை கவனம் தடுப்பதில் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *