SPM மாணவர்களுக்கு RM38,400 கல்வி ஊக்கத்தொகை! - Preakas Sampunathan
- Sangeetha K Loganathan
- 10 Jul, 2025
ஜூலை 10,
SPM தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற KOTA KEMUNING தொகுதி மாணவர்களுக்கு அதன் சட்டமன்ற உறுப்பினர் Preakas Sampunathan அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான ஊக்கத் தொகையாக RM38,400 ரிங்கிட் வழங்கினார். கோத்தா கெமுனிங்கில் உள்ள 6 இடைநிலைப்பள்ளிகளிலிருந்த்து 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர்களில் SPM தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு மேல்கல்விக்குப் பயனளிக்கும் வகையில் இந்த ஊக்கத் தொகை அமைவதாகவும் KOTA KEMUNING சட்டமன்ற உறுப்பினர் Preakas Sampunathan தெரிவித்தார்.
ஒரு தோட்டத்தொழிலாளியின் மகனான நான் இப்போது சட்டத்துறையில் பட்டம் பெற்றவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறேன் என்றால் அதற்கு கல்வி முக்கிய காரணம் என்றும் எந்தவொரு சூழ்நிலையிலும் கல்வியை நிறுத்தாமலும் அதற்கு தடை ஏற்படாமலும் இருக்க நான் உறுதுணையாக இருப்பேன் என KOTA KEMUNING சட்டமன்ற உறுப்பினர் Preakas Sampunathan நம்பிக்கை அளித்தார்.
Seramai 150 pelajar SPM cemerlang di Kota Kemuning menerima insentif pendidikan berjumlah RM38,400 daripada ADUN Preakas Sampunathan. Beliau menegaskan pendidikan penting untuk kejayaan tanpa mengira latar belakang malah berikrar akan terus menyokong pendidikan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



