லஞ்சம் & பாலியல் சேவை பெற்றதாகக் காவல்துறை அதிகாரி கைது!
- Sangeetha K Loganathan
- 06 Jul, 2025
ஜூலை 6,
காவல்துறையின் விசாரணையின் போது விசாரணை அதிகாரி குற்றம் சுமத்தப்பட்டவர்களிடமிருந்து லஞ்சமும் பாலியல் சேவையையும் பெற்றதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். கெடாவின் கோலா மூடா மாவட்டக் காவல் நிலையத்தைச் சேர்ந்த INSPECTOR பொறுப்பிலிருக்கும் அதிகாரி 2 வெவ்வேறு புகார்களின் விசாரணைக்காக அவர் லஞ்சம் பெற்றதாகவும் பாலியல் சேவைக்காகப் பெண்களை வரவழைத்து உல்லாசமாக இருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதை Kuala Muda, மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்டிருக்கும் 29 வயதான INSPECTOR பொறுப்பிலிருக்கும் அதிகாரி சட்டமீறலிலும் ஒழுங்கு மீறலிலும் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் நேற்று மாலை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சம்பவங்களில் ஈடுப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பாலியல் சேவைகளைப் பெற்றதாகவும் காவல்துறை சந்தேகிக்கும் நிலையில் முதற்கட்ட விசாரணைக்காக அவர் காவல்துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் லஞ்சம் தொடர்பானக் குற்றச்சாட்டுகளின் விசாரணைக்காக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமும் 29 வயதான INSPECTOR பொறுப்பிலிருக்கும் அதிகாரியை விசாரிக்கும் என Kuala Muda, மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan உறுதிப்படுத்தினார்.
Seorang pegawai polis berpangkat inspektor dari IPD Kuala Muda ditahan kerana disyaki menerima rasuah dan perkhidmatan seksual daripada individu yang disiasat. Pegawai berusia 29 tahun itu kini ditahan untuk siasatan lanjut oleh polis dan SPRM.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



