'இன்ஸ்பெக்டர் ஷீலா' விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் -கோலாலம்பூர் காவல்படைத் தலைவர்
- Tamil Malar (Reporter)
- 11 Nov, 2025
செய்தி-வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், நவ.
11-
சமீபத்தில் ஒரு
பாகிஸ்தான் பிரஜையை காவல்
துறையினர்
சோதனை செய்யும்போது, அதிகாரிகளை
இழிவுபடுத்தி கேள்வி எழுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 'இன்ஸ்பெக்டர் ஷீலா' விரைவில்
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டை எதிர்கொள்ளவுள்ளதாக கோலாலம்பூர் காவல்படைத் தலைவர் டத்தோ
பாடில் மார்சூஸ் அறிவித்துள்ளார்.
தீபாவளி
விருந்து
நிகழ்ச்சிக்குப் பின் நடந்த ஊடக சந்திப்பில் பேசிய பாடில், சோதனை
அறிக்கை அரசு தரப்பு துணை
வழக்கறிஞர்
அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டது. விசாரணை முடிந்தது. விரைவில் அவருக்கு
எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டு பதிவு செய்யப்படும் என்றார்.
இந்த
சம்பவம், சமூக
ஊடகங்களில் பரவலாகப் பதிவான வீடியோவில், ஷீலா போலீஸ் அதிகாரிகளின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார். இது போலீஸ் துறையின் நடைமுறைகளைப்
பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஷீலா, முந்தைய சம்பவங்களிலும் சமூக ஊடகங்களில் பிரபலமானவர். 2023இல் அவர் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு எதிராக
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



