குளுவாங்கிற்கு வார இறுதி இ.டி.எஸ்- ரயில் சேவையை அறிமுகப்படுத்திய கே.டி.எம்.பி!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

குளுவாங், அக்.1-

மலேசிய நிலக்கரி ரயில்வே நிறுவனம் தனது பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், குளுவாங்-கே.எல் சென்ட்ரல் இடையே இரண்டு புதிய இ.டி.எஸ் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவை வரும் அக்டோபர் 10 முதல் ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும்.

ஒவ்வொரு ரயிலும் 315 இருக்கைகள், அதில் வணிக வகுப்பு வசதியும் உண்டு. இந்த வார இறுதி சேவைகள் குளுவாங் மக்களுக்கு கோலாலம்பூர் செல்லும் பயணத்தை விரைவாகவும், சுகமாகவும் மாற்றுவதோடு, சாலைகளில் காணப்படும் வார இறுதி நெரிசலை தவிர்க்கும் சிறந்த வாய்ப்பையும் வழங்குகிறது.

கடந்த ஆகஸ்ட் 30 முதல் தினசரி அடிப்படையில் கே.எல். சென்ட்ரல் -குளுவாங் இடையே இ.டி.எஸ் இயக்கம் தொடங்கிய நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. செப்டம்பர் 28 வரை, மொத்தம் 10,873 பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி யுள்ளனர். இதில் திங்கள் முதல் வியாழன் 4,461 பேர், வார இறுதிகளில் 6,412 பேர் பயணம் செய்துள்ளனர்.

இது மக்கள் அளிக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.புதிய வார இறுதி சேவைக்கான டிக்கெட்டுகள் அக்டோபர் 1 (புதன்கிழமை) காலை 10 மணி முதல் கேடிஎம்பி மொபைல் செயலி , கியோஸ்க் இயந்திரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பெறக்கூடியதாக இருக்கும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *