பிரதமரின் அரசியல் செயலாளராக இருந்த ஷம்சுலிடம் MACC விசாரணை!
- Shan Siva
- 26 Nov, 2025
கோலாலம்பூர், நவ 26: பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகினுக்கு தொழிலதிபர் ஆல்பர்ட் டெய் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி தனது விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
இந்தக் கூற்றை கூறியதாகக்
கூறப்படும் டெய் மற்றும் ஷம்சுல் இஸ்கண்டார் இருவரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்
என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
முன்னதாக ஷம்சுலின் விசாரணை
எந்தவித குறுக்கீடுகளும் இல்லாமல் சுதந்திரமாக நடைபெற வேண்டும் என பிரதமர் அன்வார்
தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



