ம.சீ.ச – ம.இ.காவை அழைக்கும் பாஸ்! அவ்விரு கட்சிகளுக்கு நல்லதல்ல! - ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப் 2: பாரிசான் நேஷனல் (BN) தலைவர் அகமது ஜாஹிட் ஹமிடி, பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், ம.சீ.ச மற்றும் ..காவை எதிர்க்கட்சித் தரப்பில் சேர்க்க முயற்சிப்பது, அவ்விரு கட்சிகளுக்கும் நல்ல பலன்களைத் தராது என்று தெரிவித்தார்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை, சில மாநிலக் கிளைகள் அரசாங்கத்தில் பதவிகள் இல்லாததால் அதிருப்தி தெரிவித்த நிலையில், ம.சீ.ச மற்றும் ..கா கட்சிகள் பாரிசான் நேஷனலிலிருந்து விலக வேண்டும் என்று கோரியதைத் தொடர்ந்து, துவான் இப்ராஹிம்,  ம.சீ.ச மற்றும் ..காவை பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் சேர அழைத்தார்.

துவான் இப்ராஹிம் இந்த அழைப்பை தனிப்பட்ட முறையில் செய்ததாகக் ஜாஹிட் கூறினார்.

.சீ.  மற்றும் ..காவின் உயர்மட்ட தலைவர்கள் தன்னுடன் பாரிசானை விட்டு வெளியேறும் விவகாரம் குறித்துப் பேசியதில்லை என்றும்,  அதோடு, அது பாரிசானின் உச்சமன்றக் கூட்ட விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுமில்லை என்று ஜாஹிட் கூறினார்.

பாரிசான் கூட்டணி கட்சிகளிலுள்ள எங்கள் நண்பர்களுக்கு சிலர் தரும் சலுகைகள், அவ்வறிக்கைகள் அவர்களுக்கு உண்மையான பலனை அளிப்பதில்லை என்பதை நன்கு அறிவேன் என்று ஜாஹிட் கூறினார்.

ம்னோ தலைவர் மட்டுமின்றி, துணைப் பிரதமர் மற்றும் கிராமப்புற மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும் உள்ள ஜாஹிட், இங்கே நடைபெற்ற கிராமப்புற மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *