மலேசிய சட்டங்களை மீறினால் நாட்டிற்கு வெளியே இருந்தாலும் கூட, சட்ட நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த புதிய ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம், முக்கிய சமூக ஊடக தளங்களுக்குப் பின்னால் உள்ள உயர் நபர்கள் நாட்டிற்கு வெளியே இருந்தாலும் கூட, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சட்டத்தின் கீழ், நாட்டில் எட்டு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களைக் கொண்ட எந்தவொரு செய்தி அல்லது சமூக ஊடக சேவையும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்று தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.மலேசியாவில் பயனர்களுக்கு வழங்கப்படும் அனைத்து செய்தி மற்றும் சமூக ஊடக சேவைகளும் நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிகளின்படி செயல்படுவதை இது உறுதி செய்கிறது  என்று அவர் மக்களவையில் தெரிவித்தார்.

உரிமம் பெற்ற தளங்கள் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் வழங்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க வேண்டும் என்றும், கீழ்ப்படியத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தியோ கூறினார்.ஒரு நிறுவனம் ஒரு குற்றத்தைச் செய்தால், இயக்குனர், தலைமை நிர்வாகி, மேலாளர் அல்லது நிறுவனத்தின் விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் வேறு எந்த நபரும் மீது குற்றம் சாட்டப்படலாம் என்று அவர் கூறினார்.

மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் எலோன் மஸ்க் போன்ற சமூக ஊடக தள உரிமையாளர்கள் வெளிநாடுகளில் செயல்பட்டாலும், அவர்கள் மலேசிய சட்டங்களை மீறினால், அவர்கள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *