போலந்து வான்வெளியில் அத்துமீறல்! மலேசியர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
- Shan Siva
- 11 Sep, 2025
கோலாலம்பூர், செப் 11:
போலந்து வான்வெளியில் தொடர்ந்து அத்துமீறல்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, Podlaskie, Mazowieckie மற்றும் Lubelskie மாகாணங்களில் வசிக்கும் அனைத்து மலேசிய குடிமக்களும்
விழிப்புடன் இருக்குமாறு போலந்தில் உள்ள மலேசிய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட
பகுதிகளில் உள்ள மலேசியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்,
நம்பகமான செய்தி ஆதாரங்கள் மூலம் தகவல்களைப்
பெறவும், தேவையற்ற பயணங்களைத்
தவிர்க்கவும் தூதரகம் தனது X பதிவில்
வெளியிடப்பட்ட அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பிற்கு
முன்னுரிமை அளித்து தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு
காரணங்களுக்காக வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ரயில்வே கிராசிங்குகள் உட்பட
பெலாரஸுடனான தனது எல்லையை போலந்து முழுமையாக மூடும் என்று போலந்து பிரதமர்
டொனால்ட் டஸ்க் அறிவித்தார்.
இந்த நடவடிக்கை
அனைத்து எல்லைக் கடப்புகளையும் பாதிக்கும் என்று போலந்து பத்திரிகை நிறுவனம்
தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



