சாலையோரத்தில் பெண்ணின் சடலம் மீட்பு! திட்டமிட்ட கொலையா? காவல்துறை சந்தேகம்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 28,

இன்று அதிகாலை ஈப்போ கம்போங் ஜாவா சாலையின் அருகில் ஒரு பெண்ணின் சடலம் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டது. அதிகாலை 6 மணிக்குக் கம்போங் ஜாவா Jalan Horley சாலையில் நடைப்பயிற்சியின் போது ஆடவர் ஒருவர் சடலத்தைக் கண்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர்  Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார். உயிரிழந்தவர் உள்ளூர் பெண் என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் இச்சம்பவம் அதிகாலை 4.24 மணிக்கு நிகழ்ந்திருப்பதாகக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளதாக  Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார். ஈப்போ கம்போங் ஜாவா Jalan Horley சாலையில் உள்ள CCTV காணொலியில் வெள்ளை நிற லாரி மோதும்படியானக் காணொலி பதிவாகியிருப்பதாகவும் சம்மந்தப்பட்ட லாரியைக் காவல் துறையினர் அடையாளம் கண்டிருக்கும் நிலையில் இது திட்டமிட்ட கொலையாக இருக்கவும் வாய்ப்புள்ளது என ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர்  Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *