25,000 பேருக்குப் பயனளிக்கும் LiKES திட்டம்! - ரமணன் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 6: தொழில்துறை பயிற்சியை வலுப்படுத்தி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில் அரசால் செயல்படுத்தப்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான இன்டர்ன்ஷிப் பணியமர்த்தல் பொருத்த நிதியுதவி  திட்டமான LiKES திட்டத்தின் மூலம், மொத்தம் 25,000 பயிற்சியாளர்கள் பயன் பெற உள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

LiKES திட்டத்திற்கான அனுமதி செயல்முறை, முன்பு இருந்த 90 வேலை நாட்களிலிருந்து 14 வேலை நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், தகுதி பெறும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் RM2,000 முன்பணம் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த திட்டம் டாலண்ட் கார்ப்பரேஷன் மலேசியா பெர்ஹாட் (TalentCorp) மூலம் ‘செலுத்தி–கோரிக்கை முன்வைத்தல்’ (pay-and-claim) அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாகவும், 2024ஆம் ஆண்டில் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு RM30 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

RM2,000 தொகை மார்ச் 1 முதல் வழங்கப்படும். TalentCorp நிர்ணயித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 14 வேலை நாட்களுக்குள் அந்தத் தொகையை நிறுவனங்கள் பெறலாம்.

சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் தங்களைப் பயிற்றுவித்து, திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்புக்குத் தயாராக இது மிகச் சிறந்த வாய்ப்பாகும்  என அவர் இன்று TalentCorp தலைமையகத்திற்கு மேற்கொண்ட பயணத்துக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *