ரிலீஸிற்கு முன்பே சிறை பட இயக்குநருக்கு கார் பரிசு!

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம் பிரபு. இவரின் இயக்கத்தில் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.

அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் 2வது வெளியாகவுள்ள படம்தான் சிறை(Sirai). இந்த படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் கதையை டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ்  எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறை படமானது உண்மையான கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் அறிமுக நடிகர் அக்ஷய் குமார் என்பவரும் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து நேற்று 2025 டிசம்பர் 22ம் தேதியில் இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருந்தது.

அதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், தமிழ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர் இந்நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக நடந்த நிலையில், அதில் தயாரிப்பாளர் லலித் குமார் சிறை பட இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரிக்கு புது காரை  பரிசாக வழங்கியுள்ளார்.

பொதுவாக தயாரிப்பாளர்கள் படம் வெளியாகி வெற்றிபெற்ற பிறகு இயக்குநர்களுக்கு பரிசு வழங்குவது வழக்கமாக கொண்டிருந்தாலும், சிறை படத்தின் ரிலிஸிற்கு முன்னே தயாரிப்பாளர் லலித் பரிசு கொடுத்துள்ளார். அப்போது இந்த சிறை படத்தின் மீது இவருக்கு எந்தளவிற்கு நம்பிக்கை இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது. 

இந்த படமானது காதல் கதை தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் அறிமுக நடிகர் அக்ஷய் குமார் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் கதையை டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார். இவரின் எழுத்தில் வெளியாகும் 2வது போலீஸ் கதை களம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ந்து போலீஸ் தொடர்பான கதைகளை இயக்க காரணம், இவர் முன்பு தமிழக காவல்துறை அதிகாரியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025 டிசம்பர் 22ம் தேதியில் இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக நடந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் லலித் குமார், தளபதி விஜய்க்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இவ்வளவு பெரியதாக வளர்வதற்குக் காரணமே தளபதி விஜய் தான் என அவர் தெரிவித்திருந்தார். தயாரிப்பாளர் லலித், மாஸ்டர் மற்றும் லியோ போன்ற விஜய் திரைப்படங்களை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *