கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- Surendran Sumdraraj
- 14 Jul, 2026
ஷார்ஜா, ஜூலை 14-
ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஆறு இந்தியர்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.
‘மொம்பாசா’ மற்றும் ‘அல் பாஹியா’ ஆகிய கப்பல்கள், ஹார்மூஸ் ஜலசந்தியின் தெற்குப் பகுதியில் உள்ள ஓமன் கடல் எல்லைக்குள் பயணித்தபோது தாக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணைகள் தாக்கியதில் இரண்டு கப்பல்களிலும் தீப்பற்றி, பலத்த சேதம் ஏற்பட்டது. பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மொம்பாசா கப்பலில் பணியாற்றிய இந்தியர் ஒருவர் தாக்குதலில் உயிரிழந்தார். காயமடைந்த எட்டு பேரில் ஆறு பேர் இந்தியர்கள்; மற்ற இருவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



