ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்

top-news
FREE WEBSITE AD

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ள ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில், கடலில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளைக் கண்டறிய முடியாமல் ஈரான் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையாகக் கருதப்படும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணை பகுதியில் கடற்படை மூலம் பல இடங்களில் கடல் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் பாதுகாப்பு காரணங்களால் அந்த நீரிணையை மூடிய ஈரான், தற்போது அதை முழுமையாக திறக்க முடியாத சூழலில் உள்ளது.

இதற்குக் காரணம், கண்ணிவெடிகள் எங்கு எங்கு வைக்கப்பட்டன என்ற துல்லியமான தகவல்கள் ஈரான் தரப்பிலேயே இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நீரில் மிதக்கும் வகையிலான சில வெடிகுண்டுகள் திசை மாறியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எந்த பகுதி பாதுகாப்பானது, எந்த பகுதி ஆபத்தானது என்பதை உறுதிப்படுத்த முடியாமல் ஈரான் கடும் சிக்கலில் சிக்கியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *