ஓமன் வளைகுடா பகுதியில் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- Surendran Sumdraraj
- 07 Jul, 2026
மஸ்கட், ஜூலை 7 –
ஓமன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு கப்பல்கள் சேதமடைந்தன. இருப்பினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் ஒன்று கத்தார் திரவ இயற்கை எரிவாயு (LNG) கப்பல் எனக் கூறப்படுகிறது. கப்பலின் இயந்திரப் பகுதியில் தாக்குதல் நடந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம், ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா–ஈரான் இடையே சமீபத்தில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள புதிய பதற்றமாகக் கருதப்படுகிறது. உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து இந்தத் தாக்குதல் மீண்டும் சர்வதேச கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



